வல்லம் கிராமத்தில் 17 செ.மீ மழைப் பொழிவு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில் ), விழுப்புரம் 63, கோலியனூர் 57, வளவனூர் 49,கெடார் 46, முண்டியம்பாக்கம் 60, நேமூர் 69, கஞ்சனூர் 81, சூரப்பட்டு 58, வானூர் 87, திண்டிவனம் 127, மரக்காணம் 71, செஞ்சி 100,செம்மேடு 89, வல்லம் 175,அனந்தபுரம் 91, அவலூர்பேட்டை 98, மணம்பூண்டி 41, முகையூர் 54, அரசூர்16.5, திருவெண்ணெய்நல்லூர் 37. மாவட்டத்தில் மொத்த மழை அளவு 1568.50 மி.மீ, சராசரி மழை அளவு 74.69 மி.மீ ஆகும். இம்மழையில் 2 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் ஒரு மாடு பலத்த காயமடைந்துள்ளது என்று ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் அங்குள்ள தரைப்பாலத்தின் தடுப்புச்சுவரில் உடைப்பு ஏற்பட்டது. தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை பார்வையிட்ட ஆட்சியர் மோகன் உடைந்த தடுப்புச் சுவரை சரி செய்ய உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

கருத்துப் பேழை

34 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

18 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்