நாகர்கோவிலில் உணவில் எளிய முறையில் கலப்படத்தை கண்டறியும் கண்காட்சி :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புதுறை சார்பில் உலக உணவு தினம், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் ஆகியவை நாகர்கோவில் டதி பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உணவில் எளிய முறையில் கலப்படத்தை கண்டறிதல் பற்றிய கண்காட்சியை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தொடங்கி வைத்து, உணவின் முக்கியத்துவம் குறித்தும், உணவை வீணாக்குவதை தவிர்ப்பது குறித்தும் பேசினார். நாகர்கோவில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் குமாரபாண்டியன் கலப்பட உணவை கண்டறியும் முறை குறித்து விளக்கினார்.

உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில் மாணவ, மாணவிகள் அயோடின் பற்றாக்குறைபாடு தடுப்பு தின உறுதிமொழி எடுத்துகொண்டனர். உலக உணவு தினம், அயோடின் பற்றாக்குறை தடுப்பு தினம் தொடர்பாக நடந்த கட்டுரை, பேச்சு மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையர், ஜெனட் வசந்தகுமாரி ஆகியோர் பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்