கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி வழிபாடு :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.

முக்கடல் சங்கம கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில் முன்பு பக்தர்கள் சங்கமித்து வழிபாடு நடத்தினர். அணையா தீபம் ஏற்றுதல், கயிலை வாத்தியம் இசைத்தல், சுமங்கலி பெண்கள் அகல் தீபங்களை ஏந்தி வந்து நெய் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. சிவாச்சாரியார்களும், அர்ச்சகர்களும் கையில் 5 அடுக்கு தீபம் ஏந்தி கடலை நோக்கி நின்று ஆரத்தி எடுத்தனர். முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம் மின்னொளியில் ஜொலிக்க நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டின்போது ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினர்.

வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விவேகானந்தா கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன், பாஜக குமரி மாவட்ட தலைவர் தர்மராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி பவுர்ணமி நாட்களில் தொடர்ந்து நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

18 mins ago

வாழ்வியல்

50 mins ago

உலகம்

48 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்