தருமபுரியில் திமுக முன்னிலை :

By செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்ட உள்ளாட்சி அமைப்பின் காலியிடங்களுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

நல்லம்பள்ளி ஒன்றியம் எச்சன அள்ளி ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 83 வாக்குகள் பெற்று வி.ஜோதி தேர்வு செய்யப்பட்டார். 77 வாக்குகளுடன் மு.ராஜேஸ்வரி இரண்டாம் இடம் பிடித்தார். அதேபோல, கடத்தூர் ஒன்றியம் சில்லார அள்ளி ஊராட்சியின் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 3 வேட்பாளர்களில் ஆர்.மூர்த்தி 115 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.

மாவட்ட ஊராட்சிக் குழு

அதேபோல, தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுவில் காலியாக இருந்த 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின் 10-வது சுற்று முடிவில், திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தா.லதா 17 ஆயிரத்து 123 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் தீ.கண்ணன் 11 ஆயிரத்து 279 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் இருந்தனர். வாக்கு எண்ணிக்கை இரவு 8 மணியைக் கடந்தும் தொடர்ந்து நீடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

விளையாட்டு

17 mins ago

இணைப்பிதழ்கள்

43 mins ago

தமிழகம்

53 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்