அக்.16-ல் கட்டபொம்மன் நினைவு நாள் : பொதுமக்கள் பங்கேற்க கட்டுப்பாடுகள் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. எனவே, அக்டோபர் 16-ம் தேதி நடைபெறவுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் 222-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடமான கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை ஆகியவற்றுக்கு பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக செல்லவோ, ரத ஊர்வலத்துக்கோ மற்றும் எவ்வித ஊர்வலத்துக்கோ அனுமதி கிடையாது. பால்குடம் எடுத்து செல்வதற்கோ, அன்னதானத்துக்கோ அனுமதி இல்லை. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் நிகழ்ச்சி நடைபெற வேண்டும். ஜாதி ரீதியாக சட்டை அணியவோ, பிற ஜாதியினரை புண்படுத்தும்படி கோஷம் எழுப்பவோ கூடாது. நீதிமன்ற உத்தரவுப்படி டிஜிட்டல் பேனர்கள் எதுவும் வைக்க அனுமதியில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 mins ago

ஜோதிடம்

28 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்