அஞ்செட்டி வனச்சரகத்தில் 4 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய தன்னார்வலர்கள் :

By செய்திப்பிரிவு

அஞ்செட்டி வனச்சரகத்தில் வனஉயிரின பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு வன த்தை ஒட்டிச் செல்லும் 13 கி.மீ. நீளமுள்ள சாலையின் இருபுறமும் வழிப்பயணிகளால் வீசப்பட்டிருந்த கழிவுகளை தன்னார்வலர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

இந்நிகழ்வை தேன்கனிக் கோட்டை சார்பு நீதிபதி ஏ.தமிழ்செல்வன் தொடங்கி வைத்தார். இதில் ஓசூர் வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நிர்வாகிகள், 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று, ஓசூர் வனக்கோட்டம் அஞ்செட்டி வனச்சரகத்தில் குந்துகோட்டை முதல் அஞ்செட்டி வரை உள்ள 13 கி.மீ. நீளமுள்ள சாலையின் இருபுறமும் வழிப்பயணிகளால் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட குப்பை கழிவுகளை அகற்றினர்.

இப்பணியில் மொத்தம் 4 டன் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு அஞ்செட்டி வனப்பகுதி சாலை சுத்தப்படுத்தப்பட்டது. முன்னதாக குந்துக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடியில் அவ்வழியாகச் செல்லும் பயணிகளுக்கு வனப்பகுதியில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, அஞ் செட்டி வனச்சரகர் சீதாராமன், குந்துக்கோட்டை ஊராட்சித்தலைவர் மற்றும் இதர அமைப்புகளைச்சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்