அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிய - தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பணி கோரி மனு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் தற்காலிகமாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பணி கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் நேற்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாங்கள் 11 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கரோனா பேரிடர் காலத்தில் கடந்த 3.10.2020 முதல் 30.9.2021 வரை ஒரு வருடம் தூய்மைப் பணியாளர்களாக தற்காலிகமாக பணியாற்றி வந்தோம். இரவு, பகல் பாராமல் எங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றினோம். கரோனாவை எதிர்கொள்ள அனைத்து பயிற்சிகளையும் அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொண்டோம். ஆனால் முன்னறிவிப்பின்றி எங்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள். இதனால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டு, உணவிற்கே வழியில்லாமல் தவிக்கிறோம். எங்களின் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் தொடர்ந்து தற்காலிக பணியாளர் களாக பணியாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தர்ணா போராட்டம்

நாச்சிக்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, நாச்சிக்குப்பத்திலிருந்து கங்கோஜி கொத்தூர் செல்லும் வழியில் சுமார் 70 ஏக்கர் அளவில் கோழிப்பண்ணைகள் இருப்ப தால் அதன் கழிவுகளிலி ருந்து ஈக்கள், பூச்சிகள் அதிகமாக உற்பத்தியாகி விவசாய பயிர்களை நாசம் செய்கிறது.

கோழி கழிவுகளால் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. கோழிப் பண்ணைகளால், 2 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். ஏற்கெனவே 4 முறை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்