தேர்தல் ஆணையத்தை தவறாக வழிநடத்துகிறது : புதுவை அரசு மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுவையில் இடஒதுக்கீடு அளித்து தேர்தலை நடத்தக்கோரி காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் நேற்று பந்த் போராட்டம் நடந்தது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பந்த் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆனால் கட்சியின் சார்பில் கம்பன் கலையரங்கில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கி பேசியதாவது:

நகராட்சி, கொம்யூன் பஞ் சாயத்து தேர்தலில் இடஒதுக்கீடு குளறுபடிகளை சரிசெய்து தேர்தலை நடத்த வேண்டும். 2006-ல் தேர்தல் நடந்து 2011-ல் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்தது. கடந்த 10 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் மூலம் மக்களுக்கு அடிப்படை தேவைகள் கிடைக்க வேண்டும்.

இப்போது தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்ற குழப்பத்தை என்ஆர் காங்கிரஸ் - பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசு தேர்தல் ஆணை யத்தை தவறாக வழிநடத்தி, அரசியல் சூழ்ச்சி செய்து தேர்தலை ரத்து செய்யநினைக்கின்றனர். இடஒதுக் கீடு குளறுபடி களை சரிசெய்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.இதேபோல் உழவர்கரை நகராட்சி, பாகூர், திருபுவனை, வில்லியனூர் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் போராட்டம் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

வணிகம்

22 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

46 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்