தக்கலையில் சீமான் அணிவித்த மாலையை - காமராஜர் சிலையிலிருந்து அகற்றிய காங்கிரஸார் : சிலையை கழுவி பாலாபிஷேகம் செய்ததால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

தக்கலையில் காமராஜர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அணிவித்த மாலையை அகற்றிய காங்கிரஸார், சிலையை கழுவி பாலாபிஷேகம் செய்ததால் பரபரப்பு நிலவியது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று முன்தினம் மாலையில் கனிமவள கடத்தலை கண்டித்து நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இதற்கு சில தினங் களுக்கு முன்பாகவே காங்கிரஸ் கொள்கை எதிர்ப்பாளராக சீமானை கருதுவதால் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அவரை அனுமதிக்கமாட்டோம் என காங்கிரஸார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகளின் கண்டன உரைகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தக்கலையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சீமான் பங்கேற்றார். முன்னதாக பேருந்து நிலையம் முன்புள்ள காமராஜர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து சீமான் சென்றதும், தேசிய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையில் அங்கு திரண்ட ஹனுகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு சீமான் அணிவித்த மாலையை அகற்றி வீசி எறிந்தனர். தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்திய பின்னர் காமராஜர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, புதிதாக மாலை அணிவித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

41 mins ago

கருத்துப் பேழை

37 mins ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

21 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்