வன உயிரின வார விழாவையொட்டி கோவை, உதகையில் சைக்கிள் பேரணி :

By செய்திப்பிரிவு

வன உயிரின வார விழாவை யொட்டி கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது.

தடாகம் சாலை, லாலி சாலை சந்திப்பு, காந்திபார்க், டிபி சாலை, ஆர்.எஸ்.புரம் அஞ்சல் நிலையம், மேட்டுப்பாளையம் சாலை வழியாக சென்ற இந்த சைக்கிள் பேரணி வன உயர் பயிற்சியக வளாகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள், பயிற்சி வனச்சரக அலுவலர்கள், வனப் பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையில், கோவை வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர், பயிற்சி வனச்சரக அலுவலர்கள் 44 பேர், மதுக்கரை வனச்சரக வனப்பணியாளர்கள், வேட்டைத்தடுப்புக் காவலர்கள் ஆகியோர் மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு சோளக்கரை பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

உதகை

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இப்பேரணியானது உதகை மத்திய பேருந்து நிலையத்தில் தொடங்கி, மாரியம்மன் கோயில்சாலை, காபி ஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டு, ஏடிசி வழியாக மீண்டும் மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. உதவி வனப் பாதுகாவலர் சரவணன், நகராட்சி ஆணையாளர் ஆர்.சரஸ்வதி, உதகை வட்டாட்சியர் தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.வனவிலங்கு வார விழாவையொட்டி உதகையில் நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் பங்கேற்றோர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

இந்தியா

16 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

மேலும்