மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் விரைவில் - மீன்சார்ந்த உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை : கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

“மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் மீன்சார்ந்த உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படும்” என, கன்னியாகுமரி ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் 75-வது சுதந்திர தின அமிர்தம் திருவிழா வணிக வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் மா.அரவிந்த், ‘முறையான மீன்பிடிப்பு, வளமான எதிர்காலம்’ என்பதை வலியுறுத்தி விவேகானந்தர் பாறை வரை படகுகள் அணிவகுப்பை தொடக்கி வைத்தார்.

ஆட்சியர் பேசியதாவது:

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. கடலோர, துறைமுகப் பகுதிகளில் வசிக்கும் மீனவ மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மாதமும் அந்தந்த கடலோர பகுதிகளில் குழுக்கள் அமைத்து மீனவ மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகளவில் கிடைக்கும் மீன்களை கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் மீன்சார்ந்த உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சின்னமுட்டம், தேங்காய்பட்டி ணம் மீன்பிடி துறைமுகங்களில் அதிக இடவசதி உள்ளது. இங்கு புதிதாக மீன் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு தேவையான அனைத்து உதவி களும் மீன்வளத்துறை சார்பில் செய்துதரப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்