வால்பாறை தெப்பக்குளம் மேட்டில் - பழங்குடியினருக்கு இடம் கோரி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

ஆனைமலை புலிகள் காப்பகத் திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகப் பகுதியில் கல்லார்குடி என்ற இடத்தில் காடார் பழங்குடியி னரின் கிராமம் உள்ளது. இங்கு காடர் இனத்தைச் சேர்ந்த 23 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி பெய்த கனமழையால் கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் நிலச்சரிவால் சேதமடைந்தன. இதையடுத்து வனத்துறையினர் கல்லார்குடி கிராம மக்களுக்கு மாற்று ஏற்பாடாக அப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் தொழிலாளர் குடியிருப்புகளில் இடம் ஒதுக்கி தந்தனர். இந்நிலையில் தங்கள் வாழ்வாதார தேவைக்காக தெப்பக்குளம்மேடு பகுதிக்குள் இடம் ஒதுக்கி தர வேண்டுமென பழங்குடியின மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து நில அளவை செய்து இடம் கொடுக்க தேசிய புலிகள் ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் 3 ஆண்டுகளாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் கல்லார்குடி மக்களுக்கு தெப்பக்குளமேடு பகுதியில் உடனே இடம் ஒதுக்கி தர வலியுறுத்தி அனைத்து அரசியல், சமூக இயக்கங்கள் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

வணிகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்