சிவலோகத்தில் 47 மிமீ மழை :

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டு விட்டு மிதமான மழை பொழிந்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சிவலோகத்தில் (சிற்றாறு-2) 47 மிமீ மழை பதிவானது. குழித்துறையில் 20, சிற்றாறு ஒன்றில் 18, பேச்சிப்பாறையில் 12, பெருஞ்சாணியில் தலா 7 மிமீ மழை பெய்தது. மலையோரப் பகுதிகளில் மழை பெய்த நிலையில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நேற்று கடும் வெயில் அடித்தது.

குமரி மாவட்டத்தின் முதன்மையான நீர்ஆதாரமான 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை நீர்மட்டம் 43.33 அடியாக உள்ளது. அணைக்கு 411 கனஅடி தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து 426 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 61 அடியாக உள்ளது.

அணைக்கு விநாடிக்கு 178 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து 430 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 15.97 அடியாக உள்ளது. அணைக்கு உள்வரத்தாக 209 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 21 அடியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

ஓடிடி களம்

33 mins ago

இந்தியா

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்