கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் - பேருந்துகளில் அலைமோதும் பயணிகள் கூட்டம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் பேருந்துகளில் கரோனா பாதுகாப்பு நெறிமுறை களை கடைபிடிக்காமல் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் மீண்டும் கரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்தததையடுத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.

பேருந்துகளில் பயணம் செய்யும் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், இந்த விதிகளை யாரும்கண்டுகொள்ளவில்லை. தூத்துக்குடியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யும் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை. ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கூடமுகக்கவசம் அணியாமல் செல்கின்றனர். பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

பேருந்துகளில் கூட்டம்

தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளில் மாண, மாணவிகள் கூட்டம்அதிகமாக இருக்கிறது. சில பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்லும் அளவுக்கு நெரிசல் இருப்பதை காண முடிகிறது. இதில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் பயணிக்கின்றனர்.

காவல் துறையினர் இருசக்கர வாகனங்களில் செல்வோரை மட்டுமே ஆங்காங்கே வழிமறித்து அபராதம் விதிக்கின்றனர். பேருந்துகளில் முகக்கவசம் இல்லாமல்பயணிப்பவர்களை கண்டுகொள்வதில்லை.

தொற்று அதிகரிக்கும் அபாயம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலும் பேருந்துகளில் காணப்படும் கூட்ட நெரிசல் காரணமாக கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவத்துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பேருந்துகளில் அடிக்கடி சோதனை நடத்தி விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்ற னர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

26 mins ago

சுற்றுச்சூழல்

36 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

31 mins ago

விளையாட்டு

52 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்