புதுச்சேரியில் 393 அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் : பணி உத்தரவை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்

By செய்திப்பிரிவு

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் மதிப்பு ஊதியத்தில் பணிபுரிந்த 221 அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் 172 அங்கன்வாடி உதவியாளர்கள் 393 பேர் புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணப்பாளர்களாகவும், மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளர்களாகவும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

பணிநிரந்தரம் செய்யப்பட்ட 393 அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி சட்டபேரவை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

முதல்வர் ரங்கசாமி, 393 அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை வழங்கினார். அப்போது பணி நிரந்தர ஆணையை பெற்ற ஊழியர்கள் சிலர் முதல்வர் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

ஊதியம் உயர்ந்தது

பணிநிரந்தரம் செய்யப்பட்ட 221 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஊதியமாக ஒரு மாதத்துக்கு ரூ. 48,41,668, 172 மகளிர் மேம்பாட்டு பல்நோக்கு உதவியாளர்களுக்கு ஊதியமாக ஒரு மாதத்துக்கு ரூ.34,31,744 என மொத்தம் ரூ.82,73,412 ஊதியம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெய குமார், சமூக நலத்துறைச் செயலர் உதயகுமார், புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகத்தின் மேலாண் இயக்குநர் அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

ஜோதிடம்

57 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்