100 சதவீதம் கரோனா தடுப்பூசி இலக்கை எட்டிய தளவாய்புரம் :

By செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுக்க தடுப்பூசிசெலுத்திக்கொள்ள வேண்டும்என, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. கோவில்பட்டி சுகாதாரமாவட்டத்தில் எப்போதும்வென்றான் அருகே உள்ள வெ.தளவாய்புரம் கிராமத்தில் 100 சதவீதமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

இக்கிராமத்தில் மொத்தம் 514 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள். இங்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கே.தளவாய்புரம் கிராமம் நேற்று 100 சதவீத தடுப்பூசி இலக்கை எட்டிய கிராமமாக மாறியது. ஆட்சியர் கி.செந்தில்ராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் அனிதா, ஊராட்சி தலைவர் சீனிவாசன் நேரில் வந்து பாராட்டினர்.

சுகாதாரத்துறையினர் கூறும்போது, “ தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மேலும் பல கிராமங்கள் 80 முதல் 90 சதவீதம் என்ற நிலையில் உள்ளன. அந்த கிராமங்களை 100 சதவீதம் என்ற நிலைக்கு கொண்டு வர கவனம் செலுத்தி வருகிறோம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்