காட்பாடி ரயிலில் - வியாபாரியிடம் வெள்ளி கட்டிகள், ரொக்கம் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

ஆந்திராவில் இருந்து காட்பாடி வந்த ரயிலில் சேலம் வெள்ளி வியாபாரி எடுத்துவந்த சுமார் 17 கிலோ வெள்ளி கட்டிகள், ரூ.4.25 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்குவங்க மாநிலம் புரூலியாவில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற விரைவு ரயில் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் வாலாஜா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றப்புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமையிலான காவலர்கள் எஸ்-5 பெட்டியில் பயணித்த சேலம் பயணி ரவி (40) என்பவர் வைத்திருந்த பையை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர்.

அதில், வெள்ளி வியாபாரியான அவர் உரிய பில்கள் இல்லாமல் 16 கிலோ 950 கிராம் எடையுள்ள வெள்ளி கட்டிகள் மற்றும் ரூ.4.25 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் இருந்து புரூலியா ரயிலில் அவர் வந்ததும், காட்பாடியில் இறங்கி மாற்று ரயிலில் சேலம் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை வசம் ரவி ஒப்படைக்கப்பட்டார். அவரிடம், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

சினிமா

6 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

4 mins ago

சினிமா

22 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

16 mins ago

சினிமா

27 mins ago

சினிமா

30 mins ago

வலைஞர் பக்கம்

34 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

44 mins ago

மேலும்