வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தி.மலையில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமை ஆட்சியர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், தேரடி வீதியில் உள்ள துணிக்கடைக்கு சென்று, உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தடுப்பூசியின் முக்கியத்துவம் மற்றும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் அவர், பாவாஜி நகர் 2-வது தெரு, கோபால் தெரு, தர்கா சந்து ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்படுவதை ஆய்வு செய்தார். இதையடுத்து, கோபால் தெரு, தர்கா பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்களிடம், கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். அப்போது, சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் அஜிதா, நகராட்சி ஆணையாளர் சந்திரா, நகர் நல அலுவலர் மருத்துவர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக, தேரடி வீதியில் இயங்கும் நியாய விலை கடையில் ஆய்வு செய்து, வாடிக்கையாளர்களிடம் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

54 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்