புதுச்சேரியில் ரூ.5 கோடி பண மோசடி கோவை நிதி நிறுவன அதிகாரி கைது :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி இந்திராகாந்தி சதுக்கம் அருகே இயங்கிய கோவையைச் சேர்ந்த ஒரு தனியார் நிதி நிறுவனம், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவ தாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபட்ட தாக புதுச்சேரி சிபிசிஐடி போலீ ஸாருக்கு புகார்கள் சென்றன.

பாதிக்கப்பட்ட லாஸ்பேட் டையைச் சேர்ந்த சுதா (38) என்பவர் அளித்த புகாரின் பேரில், பலரிடம் ரூ.5 கோடி வரை மோசடி நடந்ததாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் உள்ளிட்ட சிலர் மீது புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நிதி நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷை தமிழகத்தின் சேலம் காவல்துறையினர் அங்குள்ள ஒரு வழக்கில் கைது செய்து, சிறையில் அடைத்தது தெரியவந்தது. இதையடுத்து சேலம் விரைந்த புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார், நீதிமன்ற அனுமதிபெற்று அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரமேஷை கைது செய்து நேற்று முன்தினம் இரவு புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவ லில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். நீதிமன்றம் 2 நாள் அனுமதி அளித்த நிலையில் அவரிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கண்ட நிறுவனத்தில் யாரே னும் பணம் கட்டி ஏமாந்திருந்தால், அது தொடர்பாக சிபிசிஐடி காவல்அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் எனவும் சிபிசிஐடி போலீஸார் தெரி வித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

2 hours ago

மேலும்