தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடிநீர் விநியோக நேரங்களில் மாநகராட்சி பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்ட போது பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நீர்கசிவுகள் ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் வெகுவாக பாதிப்படைவது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில் குடிநீரை மின் மோட்டார் மூலம் நேரடியாக உறிஞ்சி எடுக்கும் முறையற்ற செயலில் பெரும்பாலானவர்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதனால் கடைமடை பகுதிகளுக்கு குடிநீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.

குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொறுத்தியுள்ள நபர்கள் உடனடியாக மோட்டாரை அகற்ற வேண்டும். இல்லையெனில், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, மோட்டார் பறிமுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வீட்டு உபயோக இணைப்புகளுக்கு ரூ.15,400, வணிக உபயோக இணைப்புகளுக்கு ரூ.21,800 அபராதம் விதிக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்