மக்காச்சோளப் பயிரில் அமெரிக்க படைப்புழுஉடுமலை :

By செய்திப்பிரிவு

: உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் 10,000 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, மக்காச்சோளத்தில் பரவி வரும் அமெரிக்க படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘புழு இனங்களில், அமெரிக்க படைப்புழு மோசமானதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரே நாள் இரவில் 100 கி.மீ. கடக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது. 30 நாட்கள் மட்டுமே வாழும் இந்தப் புழுவை கட்டுப்படுத்துவதும், அழிப்பதும் பெரும் சவால் என ஆராய்ச்சியாளர்களே வியக்கின்றனர். பெரும்பாலும் மக்காச் சோளத்தையே, இப்புழுக்கள் அதிகம் தாக்குகின்றன. 25-வது நாள் பயிரில், இந்த நோய்த் தாக்குதல் தொடங்கி, 50-வது நாளில் தண்டு, இலை, கதிர் என அனைத்தும் சேதமாகிறது. இதனால் நூறு சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. நடப்பாண்டில் வேளாண் அதிகாரிகள் பரிந்துரைத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை விலைக்கு வாங்கி தெளித்து வருகிறோம். அதுவும் ஒவ்வொரு செடியாக சென்று அதன் குருத்தில் தெளிக்க வேண்டியுள்ளது. இதற்காக ஆள் கூலி, மருந்து என அதிக செலவு செய்ய நேரிடுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குவதோடு, மானிய விலையில் தடுப்பு மருந்துகள் கிடைக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 mins ago

ஜோதிடம்

21 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்