எஸ்ஐ வீட்டில் குண்டு வீசிய விவகாரம் : கேரளா தப்ப முயன்ற இளைஞர் கைது :

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள இடைக்கோட்டைச் சேர்ந்தவர் செலின்குமார். களியக்காவிளை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். கடந்த 3-ம் தேதி இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வாகனங்கள் சேதமடைந்தன. தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் குழித்துறை பாலவிளையைச் சேர்ந்த அருண்(23), விஜய்லால்(27) ஆகியோரை போலீஸார் தேடிவந்தனர். கேரளா தப்பிச்செல்ல முயன்றபோது குழித்துறை ரயில் நிலையத்தில் வைத்து அருணை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

“ரவுடிகள் பட்டியலில் உள்ள விஜய்லாலை சிறப்பு எஸ்ஐ செலின்குமார் ஏற்கெனவே தனிப்படையில் இருந்தபோது பிடிக்க முயன்றுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு களியக்காவிளை காவல் நிலையத்தில் செலின்குமார் பணியாற்றியபோது விஜய்லாலை கைது செய்ய சென்ற நிலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வேறு காவல் நிலையங்களில் பணிமாறுதலாக சென்ற செலின்குமார், மீண்டும் கடந்த ஆண்டு களியக்காவிளை காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது கஞ்சா விற்ற வழக்கில் விஜய்லாலை கைது செய்ய முயன்றுள்ளார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் குண்டுவீச்சு நடைபெற்றுள்ளது” என, விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

33 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்