சுகாதார துறை அமைச்சருக்கு கோரிக்கை :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை மீண்டும் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தற்காலிக செவிலியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், “தி.மலை அரசு தலைமை மருத்துவமனையின் கீழ் உள்ள அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தொற்று தடுப்பு பணிக்காக, தற்காலிக செவிலியர்களாக கடந்த மே மாதம் பணி அமர்த்தப்பட்டோம். அரசுக்கு கட்டுப்பட்டு, எங்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தையும் விட்டுவிட்டு, எங்களது உயிரை பணையம் வைத்து கரோனா பெருந்தொற் றுக்கு எதிராக போராடினோம். இந்நிலையில் எந்த ஒரு முன்னறி வுப்பு இன்றி கடந்த 1-ம் தேதி முதல் நாங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டோம். நாங்கள் ஏற்கெனவே, தனியார் மருத்துவ மனையில் செய்திருந்த வேலையையும் விட்டுவிட்டு தமிழகஅரசை நம்பி வந்தோம். இப்போது எங்களது நிலைமை கேள்விக் குறியாக உள்ளது. எனவே, தற்காலிக செவிலியர் பணியை தொடர அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்