சாராய வேட்டையில் ஊறல்கள் அழிப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மாதகடப்பா பாரதி நகர் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் பேரில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தலைமையில், மதுவிலக்கு தடுப்புப்பிரிவு காவல் துறையினர் தமிழக -ஆந்திரா எல்லையில் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அடர்ந்த வனப்பகுதியில் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு நடத்தினர். அப்போது, மாதகடப்பா பகுதியில் நடத்திய சாராய வேட்டையில் 200 லிட்டர் கள்ளச்சாராயம், ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள், சாராயம் அடைத்து வைக்க பயன்படுத்தப்பட்ட 25 பிளாஸ்டிக் கேன்கள், 4 அடுப்புகள் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சாராய ஊறல்கள் அதேஇடத்தில் கொட்டி அழிக்கப்பட்டன.

மேலும், வனப்பகுதியில் இருந்து காய்ச்சப்படும் சாராயத்தை நகர்புறங்களுக்கு கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கழுதைகளையும் காவல் துறையினர் மீட்டனர். வனப்பகுதிகளில் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபடுவோர்கள் குறித்து வாணியம்பாடி மதுவிலக்கு தடுப்புப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்