அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸை மாற்றினால் நடவடிக்கை : ஆபரேட்டர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் பொதுமக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மாத சந்தா தொகை ரூ.140-க்கு உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் கேபிள் டிவி சேவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று பயனடைந்து வரும் சந்தாதாரர் களிடம், அரசு கேபிள் சிக்னல் இனிமேல் வராது, அதனால் தனியார் செட்டாப் பாக்ஸ்களை வாங்குங்கள் என சில ஆபரேட்டர்கள் தவறான தகவலை தெரிவிப்பதாகத் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆபரேட்டர்கள் குறித்து 0452-2606300 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

வணிகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்