டாஸ்மாக் மதுபான கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு - பாமகவினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறந்த தற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜோலார்பேட்டை, தி.மலையில் பாமகவினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு, எதிர்க்கட்சிகள் தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகர பாமக சார்பில் வக்கணம்பட்டி பகுதியில் உள்ள பாமக கட்சி அலுவலகம் முன்பாக டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவர் குட்டிமணி தலைமை வகித்தார். நகரச்செயலாளர் ஞானமோகன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட அமைப் பாளர்கள் கலைமணி, சீதாராமன், நகரத் தலைவர்கள் அசோகன், ராஜி, முன்னாள் நகரத்தலைவர் சுந்தர், நகர துணைசெயலாளர் வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கரோனா பாதிப்பு முழுமையாக குறையாமல் இருப்பதால் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தடுப்பூசி தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதை யெல்லாம் சரி செய்யாமல் ஆளும் திமுக அரசு மதுபானக்கடைகளை திறந்துள்ளது கண்டித்தக்கது. எனவே, திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என முழக்கமிட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் காளிதாஸ் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இதேபோல், வந்தவாசி, செய் யாறு, ஆரணி, போளூர், கலசப்பாக்கம், செங்கம், கீழ்பென்னாத் தூர் உட்பட மாவட்டம் முழுவதும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கரோனா தொற்று பரவல் உள்ள காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்த தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

48 mins ago

க்ரைம்

54 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்