பட்டுக்கோட்டையில் ஜவுளிக் கடைக்கு சீல் வைப்பு :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் பின் கதவு வழியாக வாடிக்கையாளர்களை வரவழைத்து துணிகளை விற்பனை செய்த ஐவுளிக்கடைக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெரிய கடைத் தெரு பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் நேற்று அதிகாலை, பின்பக்க கதவு வழியாக வாடிக்கையாளர்கள், பொதுமக்களை அனுமதித்து ஜவுளி விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஜவஹர், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஜவுளிக் கடையை ஆய்வு செய்தனர். அப்போது, கடைக்குள் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் ஜவுளிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இதையடுத்து, ஜவுளிக் கடையில் துணிகள் வாங்கிய நபர்கள், பணியாளர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். அத்துடன் கடைக்கும் ரூ.5,000 அபராதம் விதித்து, கடையை மூடி சீல் வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்