காரைக்குடியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட ஜவுளிக்கடையை இழுத்து மூடிய அதிகாரிகள் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடையை நகராட்சி அதிகாரிகள் பூட்டி சாவியை எடுத்துச் சென்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஜூன் 7-ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், ஜவுளிக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரைக்குடி செக்காலை ரோட்டில் உள்ள ஜவுளிக்கடை விதிகளை மீறி திறக்கப்பட்டு, பின்வாசல் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து வந்தது. இதையடுத்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள் கடையைச் சோதனையிட்டனர். சமூக இடைவெளியின்றி கடைக் குள் ஏராளமானோர் குவிந்து இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், சுகாதாரத்துறையினரை வரவழைத்து, கடை ஊழியர்கள், துணி எடுக்க வந்த வாடிக் கையாளர்களுக்கு அங்கேயே கரோனா பரிசோதனை செய்தனர். மேலும் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரியை பெற்றுக் கொண்ட பிறகே வெளியேற அனுமதித்தனர்.

அதன் பின்னர் ஜவுளிக்கடையின் கதவைப் பூட்டி சாவியை நகராட்சி அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

6 mins ago

சினிமா

9 mins ago

வலைஞர் பக்கம்

13 mins ago

சினிமா

18 mins ago

சினிமா

23 mins ago

இந்தியா

31 mins ago

க்ரைம்

28 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்