சாலை வரி செலுத்தாத ஆம்னி பேருந்துக்கு அபராதம் :

By செய்திப்பிரிவு

சாலை வரி செலுத்தாமல் இயக்கிய ஆம்னி பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் தாமோதரன் தலைமையிலான குழுவினர் நேற்று தருமபுரி அடுத்த தடங்கம் மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்து ஒன்று அவ்வழியே வந்தது. அதை நிறுத்தி சோதனையிட்டபோது அந்தப் பேருந்தை தமிழ்நாட்டில் இயக்குவதற்கான சாலை வரி செலுத்தாமல் இருந்தது தெரிய வந்தது. கோவையில் இருந்து பிஹாருக்கு அந்தப் பேருந்தில் வடமாநில தொழிலாளர் கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த பேருந்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த போக்குவரத்து அலுவலர், மேலும், தமிழகத்தில் பேருந்தை இயக்குவதற்கான சாலை வரியாக ரூ.48,610-ஐயும்செலுத்த உத்தரவிட்டார். அதன்பேரில் பேருந்து ஓட்டுநர் ரூ.58,610-ஐ செலுத்திய பின்னர் பேருந்து விடுவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

36 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்