தியாகராஜர், சோனா கல்லூரிகள் சார்பில் - கரோனா சிகிச்சை மையத்துக்கு 5 வேளை உணவு வழங்கல் : கல்லூரி வளாகத்தில் சிகிச்சை மையம்

By செய்திப்பிரிவு

சேலம் தியாகராஜர் பாலி டெக்னிக் மற்றும் சோனா கல்லூரி வளாகத்தில் சுமார் 120 படுக்கை வசதியுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இரு ஆக்சிஜன் செறிவூட்டிகளை, மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம், இக்கல்லூரி கள் சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சேலம் வடக்குத் தொகுதி எம்எல்ஏ., ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார். இதுதொடர் பாக தியாகராஜர் பாலிடெக்னிக் மற்றும் சோனா கல்லூரித் தலைவர் சொ.வள்ளியப்பா, துணைத் தலைவர் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேலம் தியாகராஜர் பாலி டெக்னிக் கல்லூரியும், சோனா தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து சேலம் இரும்பாலை கரோனா சிகிச்சை மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவி லியர்கள், போலீஸார் மற்றும் சிகிச்சை பெறுவோருக்கு தினசரி 5 வேளை உணவு, வழங்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில், உள்ள பல்வேறு அரசு மருத்துவமனை களுக்கு உயிர் காக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு ரூ.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின்போது, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன், சோனா கல்லூரி முதல்வர் செந்தில்குமார், சோனா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் காதர் நவாஸ் ஆகியோர் உடனிருந்தனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

27 mins ago

சுற்றுச்சூழல்

37 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

32 mins ago

விளையாட்டு

53 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்