இதுவரை ரூ.1.61 கோடி அபராதம் வசூல் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மட்டும் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1,48,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ரூ.1,46,38,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் சமுக இடைவெளியை பின்பற்றாத நபர்களிடம் இருந்து ரூ.41,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.15,03,500 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிக கூட்டம் கூடியதாக இதுவரை ரூ.3000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ரூ.1,61,44,700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக காவல் துறை சார்பில் ரூ.1,19,72,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்: நாகர்கோவில் பேலஸ் ரோடு, அலெக்ஸாண்டிரா பிரஸ்ரோடு, பெதஸ்தா காம்ப்ளக்ஸ், வேப்பமூடு போன்ற பகுதிகளில் மாநகரநல அலுவலர் கிங்சால் மற்றும் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சமூக இடைவெளியின்றி வியாபாரம் செய்ததாக, 10 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்