கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை?உடுமலையில் வேளாண் அதிகாரி ஆய்வுஉடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் கரோனா முழு ஊரடங்கு காரணமாக, பொதுமக்களுக்கு காய்கறிகள் எளிதாக கிடைக்கும் நோக்கில், தோட்டக்கலைத் துறை மூலம் நூற்றுக்கணக்கான வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

By செய்திப்பிரிவு

கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை?

உடுமலையில் வேளாண் அதிகாரி ஆய்வு

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் கரோனா முழு ஊரடங்கு காரணமாக, பொதுமக்களுக்கு காய்கறிகள் எளிதாக கிடைக்கும் நோக்கில், தோட்டக்கலைத் துறை மூலம் நூற்றுக்கணக்கான வாகனங்களில் காய்கறி விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த தொகையைவிட, கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தாராபுரத்தில் வேளாண் இணை இயக்குநர் மனோகரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கொங்கூர் உழவர் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனத்தை ஆய்வு செய்தார். வாகனத்தில், காய்கறி விலை விவரங்கள் குறிப்பிடப்பட்டு, மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார். கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்கப்படுகிறதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். உடன், உதவி இயக்குநர்கள் சந்திரகவிதா, லீலாவதி ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

54 mins ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்