‘விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்’ :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா வுக்கான சிகிச்சை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்வதற்கான மருத்துவக் கட்டணத்தை ‘முதலமைச்சரின் விரிவான மருத்தவ காப்பீட்டு’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை மேற்கொள்ள விரும்புவோர் திருப்பத்தூர் டாக்டர் தங்கம்மா மருத்துவ மனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையை பயன்படுத்தி தனியார் மருத்துவமனையில் கரோனா மருத்துவ சிகிச்சையை இலவசமாக பெற்று பயன்பெறலாம். இது குறித்து சந்தேகம் ஏதேனும் இருந்தால் 1800 425 3993 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்கொள்ளலாம் " என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

5 hours ago

மேலும்