ஊனமுற்றோர் தேசிய நிறுவனத்தில் - காணொலியில் கோடைகால பயிற்சி வகுப்பு தொடக்கம் :

By செய்திப்பிரிவு

முட்டுக்காடு பகுதியில் இயங்கிவரும் ஓன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருமாத கோடைகால பயிற்சி வகுப்பு காணொலி காட்சியில் நேற்று தொடங்கியது.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் கோடைகால பயிற்சிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், மாற்றுத் திறனாளிகளுக்கு உடற்பயிற்சி, யோகா, கலை மற்றும்கைத்திறன் பயிற்சி போன்றவை இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகின்றன. காணொலி காட்சி மூலம் ஒருமாத காலம் நடைபெற உள்ள இப்பயிற்சி வகுப்பின் தொடக்க விழா, மாற்றுத் திறனாளிகளுக்கான மாதிரி பள்ளியில் நேற்று நடைபெற்றது.

மேற்கண்ட நிறுவனத்தின் இயக்குநர் நசிகேதா ரௌட் காணொலி காட்சி மூலம் பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்து உரையாற்றினார். கோடைகால சிறப்பு பயிற்சிகள் குறித்து சிறப்பு கல்வி விரிவுரையாளர் காமராஜ் விளக்கிக் கூறினார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக தனியார் பள்ளியின் முதல்வர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பள்ளியின் முதல்வர் லீலாவதி, சமக்ரக ஷிக் ஷா அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனார்தனன், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு குழந்தைகள், பெற்றோர்கள் என பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

21 mins ago

வணிகம்

22 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்