கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - 501 பேருக்கு கரோனா தொற்று: 7 பேர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 305 பேருக்கு கரோனா தொற்றுஏற்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்றுபுதிதாக 305 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து இதுவரையில் இம்மாவட்டத்தில் 31,525பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், நேற்று 253 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் 29,188 பேர் சிகிச்சைக்குப் பின்பு வீடு திரும்பிஉள்ளனர். தற்போது 1,718 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று கரோனா தொற்றுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 336 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 196 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று வரை 20,239 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 17,829 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிஉள்ளனர். தற்போது 2,283 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 127பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 146 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இம்மாவட்டத்தில் 13,037 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் 12,197 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 726 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்