ரயில்களில் அனுப்பி வைக்கப்படும் பார்சலுக்கான கட்டணம் குறைப்பு :

By செய்திப்பிரிவு

தற்போது மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் சில ரயில்களுக்கான பார்சல் கட்டணம் 'ராஜதானி' வகையில் இருந்து பிரீமியர் வகையாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய கட்டணத்தில் இருந்து பார்சல் கட்டணம் 33 சதவீதம் குறையும்.

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் நெல்லை சிறப்பு ரயில், திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் செந்தூர் சிறப்பு ரயில், செங்கோட்டை-சென்னை எழும்பூர் பொதிகை சிறப்பு ரயில், தஞ்சாவூர், கும்பகோணம் மெயின் லைன் வழியாக இயக்கப்படும் ராமேசுவரம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், விருத்தாச்சலம் கார்டு லைன் வழியாக இயக்கப்படும் ராமேசுவரம்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் பாலக்காடு-எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஆகிய ரயில்களுக்கான பார்சல் கட்டணம் 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணச் சலுகை உடனடியாக அமலுக்கு வருகிறது. உதாரணமாக நெல்லை சிறப்பு ரயிலில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு 100 கிலோ பார்சல் கொண்டு செல்ல பழைய கட்டணம் ரூ.290. தற்போதைய குறைக்கப்பட்ட கட்டணம் ரூ.191 என ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கார்ட்டூன்

1 hour ago

இந்தியா

33 mins ago

வர்த்தக உலகம்

37 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்