நாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு - நெல்லையில் 643, தூத்துக்குடியில் 579 பேருக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் 643 பேருக்கு கரோனா பாதிப்புநேற்று உறுதியானது. இதில்திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மட்டும் 283 பேருக்குதொற்று கண்டறியப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம்- 56, மானூர்- 39, நாங்குநேரி- 34,பாளையங்கோட்டை- 52, பாப்பாக்குடி- 27, ராதாபுரம்- 57, வள்ளியூர் - 71, சேரன்மகாதேவி- 12, களக்காடு- 12.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 121 பேருக்கு கரோனாகண்டறியப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 831 ஆகஉயர்ந்துள்ளது. நேற்று 230 பேர் உட்பட இதுவரை 10 ஆயிரத்து 232 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,424 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 175 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 579 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,406 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 342 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 19,706 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 3,547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கரோனா பாதிப்பால் மொத்தம் 153 பேர் இறந்துள்ளனர்.

குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 403 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இருவர் உயிரிழந்தனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சளிமாதிரி சோதனை மாவட்டம்முழுவதும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 3,547 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

ஜோதிடம்

28 mins ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்