கரோனா தொற்று பகுதியில் தடுப்பு :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கரோனா தொற்றுள்ள பகுதி களில் தடுப்புகள் அமைத்து, அப்பகு தியை சுகாதாரப் பணியாளர்கள் தீவிர மாக கண்காணித்து வருகின்றனர்.

ஆண்டிமடத்தை அடுத்த விளந்தை பாப்பாத்திக்கொல்லை தெருவைச் சேர்ந்த தந்தை, மகள் உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த தெருவுக்கு, வெளியில் இருந்து பொதுமக்கள் செல்ல முடியாதவாறும், அந்த தெருவில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியில் செல்லாதவாறும் தெருவின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண்டிமடம் வட்டார மருத்துவ அலுவலர் அசோக சக்கரவர்த்தி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அங்கு சென்று அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து, அனைத்து வீடுகளிலும் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனை மேற்கொண்டனர். அந்த பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினர்.

இதையடுத்து, உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத், தடை செய்யப்பட்ட பகுதியை பார்வையிட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதியில் யாரேனும் சென்று வருகிறார்களா? என்பதை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். தெருவில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுகா தார பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

5 mins ago

சுற்றுச்சூழல்

33 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

மேலும்