நீலகிரி மாவட்டத்தில் 210 பேரிடம்சளி மாதிரி சேகரித்த மருத்துவக் குழுவினர் :

By செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 47 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. கரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கரோனா பரிசோதனை செய்ய சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முடிவு செய்தது.

இதையடுத்து முக்கட்டி, கக்குச்சி, கூக்கல் உட்பட 7 கிராமங்களில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டனர். ஒவ்வொரு கிராமங்களிலும் தலா 30 பேர் என 210 பேரிடம் சளி மாதிரி சேகரித்து, பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி கூறும்போது, ‘‘சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை குழுவினர் ஜீரோ சர்வே செய்து வருகின்றனர். அதன்படி நீலகிரியில் 7 கிராமங்களை தேர்வு செய்து, கரோனா பரிசோதனைக்காக 210 பேரிடம் மாதிரி சேகரித்து சென்றனர். தற்போது எந்த வகையான கரோனா தொற்று பரவி வருகிறது என்பதைக் கண்டறியவே இந்த பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல கரோனா அறிகுறி தென்படும் நபர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்