மடத்துக்குளம் பகுதியில் கடும் பனி மூட்டம் :

By செய்திப்பிரிவு

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து பழநி சாலையில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மடத்துக்குளம் பேரூராட்சி. திண்டுக்கல்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் இப்பகுதி அமைந்துள்ளதால், இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. நேற்று காலை 8.30 மணி வரை பனி மூட்டம் நிலவியது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனஓட்டிகள் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘நேற்று காலை அமராவதி ஆற்றை ஒட்டிய பகுதி முழுவதும் மூடுபனி நிலவியது. திண்டுக்கல்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் நிலவியதால், வாகனங்களை மெதுவாக இயக்கியதோடு, முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனஓட்டிகள் சென்றனர்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

இந்தியா

12 mins ago

க்ரைம்

9 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்