இவிஎம் இயந்திரங்கள் வைக்கும் - அறையின் பாதுகாப்பு குறித்து செங்கை ஆட்சியர் ஆலோசனை :

By செய்திப்பிரிவு

திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இருப்பு அறையை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் நேரில் சென்று நேற்று ஆய்வு செய்தார். மேலும், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு அறையை ஆய்வு செய்தார்.

மேலும், அறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆலோசனைக் கூட்டம்

இதேபோல், திருப்போரூரில் தேர்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சி பொறுப்பாளர்களுடன், போலீஸார் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இதில், நடத்தை விதிகள் குறித்தும் விதிமீறல்களின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் போலீஸார் விளக்கினர். மேலும், விதிமீறல்கள் இல்லாமல் சரியான தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தினர். இந்தக் கூட்டத்தில் ஆய்வாளர் கலைச்செல்வி மற்றும் உதவி ஆய்வாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்