மின்சாரம் பாய்ந்து சிறுவன் இறந்த விவகாரம் - மின்வாரிய தலைவருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் :

By செய்திப்பிரிவு

சென்னை அருகே தாம்பரம் சக்தி நகர் ஹவுஸிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வரதன் (45). இவரது மனைவி நிஷா. இவர்களது மகன் கவுதம்(8) நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில், விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது பூங்காவுக்குள் இருந்த ஒரு மின்சார கம்பத்தை கவுதம் பிடித்தபோது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

மின்வாரிய அதிகாரிகள் மின்சார வயரை சரியாக பராமரிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என்று பெற்றோர் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகளை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தமிழக மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், டவுன் பஞ்சாயத்து இயக்குநரக இயக்குநர் ஆகியோர் விளக்கம் அளிக்கக்கோரி மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும் நீதிபதியுமான துரை ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். சிறுவன் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்தி 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

விளையாட்டு

7 mins ago

இணைப்பிதழ்கள்

33 mins ago

தமிழகம்

43 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்