ஓஎன்ஜிசி பணியை தொடங்க எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் அரிச்சபுரம் கிராமத்தில், ஏற்கெனவே 8 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் எடுக்கும் பணிகள் நடைபெற்று, பின்னர் மூடப்பட்ட கிணற்றில், மீண்டும் எண்ணெய் எடுப்பதற்காக ஓஎன்ஜிசி நிறுவனத்தினர் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு பல்வேறு உபகரணங்களைக் கொண்டுவந்து, முன்னேற்பாட்டு பணிகளைத் தொடங்கி உள்ளனர்.

இதைப் பார்த்த அப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் நேற்று தங்கள் குழந்தைகளுடன் அங்கு திரண்டு, இப்பணிகளை தடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தமிழார்வன், ஒன்றிய திமுக பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தகவலறிந்து வந்த ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 10 நாட்களுக்குள் இந்தப் பணி நிறுத்தப்பட்டு, இங்குள்ள பொருட்கள் அகற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. தொடர்ந்து, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா கூறியபோது, “இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல், இங்கு எந்தப் பணியும் நடைபெறக் கூடாது. மீறினால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்