அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் அணைப்பாளையம் குளத்தை சேர்க்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் அணைப்பாளையம் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுப்பணித் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மனுவில், "அணைப்பாளையத்தில் சுமார் 56.60 ஏக்கர் பரப்பில் மேற்கண்ட குளம் அமைந்துள்ளது.

தற்போது பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ள இக்குளம், கி.பி.700-களில் கொங்கு நாட்டை ஆண்ட சோழ மன்னர்களால் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை மூலமாக, கடந்த 1300 ஆண்டுகளாக நீர் பெற்று வந்தது. 1990-ம் ஆண்டு முதல் சாயக்கழிவு பிரச்சினையால் குளம் பாதிக்கப்பட்டது. எனவே, 2006-ம் ஆண்டு குளத்தின் நீராதாரமான தடுப்பணை உடைக்கப்பட்டு, குளத்துக்கு நீர் விடுவது தற்போது வரை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் இக்குளத்தையும் சேர்த்து, நீர் வழங்கி குளத்தை சார்ந்துள்ள பெரும்பான்மையான மக்களின் தொழிலான விவசாயத்தை காக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

5 hours ago

மேலும்