புதுச்சேரியிலிருந்து விடைபெற்றார் கிரண்பேடி கோவையில் சத்குருவை சந்திக்கிறார்

By செய்திப்பிரிவு

பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் புதுச்சேரி ஆளுநர் மாளி கையில் தங்கியிருந்த கிரண்பேடி நேற்று விடைபெற்றார். கோவை சென்று சத்குருவை சந்தித்த பிறகு டெல்லி செல்கிறார்.

சாலைகளில் தடுப்பு, துணை நிலை ஆளுநருக்கு ஐந்து அடுக்குப் பாதுகாப்பு, மக்கள் நலத்திட்டப் பணிகளில் சுணக்கம் என புதுச்சேரி மக்களுக்கு மத்திய அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்ட சூழலில் கிரண்பேடி கடந்த 16-ம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய துணைநிலை ஆளுநராகத் தமிழிசை கடந்த 18-ம் தேதி பொறுப்பேற்றார்.

அதேநேரத்தில் துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப் பட்ட கிரண்பேடி, தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலேயே தங்கியிருந்தார். இது பலவித சர்ச் சைகளை ஏற்படுத்தியது.

இச்சூழலில் நேற்று காலை வாட்ஸ்அப்பில் கிரண்பேடி கூறு கையில், “ஆளுநர் மாளிகையில் 3 நாட்கள் தங்க அனுமதி தந்த தமிழிசைக்கு நன்றி. கோவை சென்று சத்குருவை சந்தித்த பிறகு டெல்லி புறப்படுவேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்படி நேற்று கிரண்பேடி கோவைக்கு புறப்பட்டுச் சென்றார்.

“நண்பர்களை சந்திக்கவும், கடற்கரையில் நடைப்பயிற்சி செல்லவும், சுற்றுலா பயணியாக கண்டிப்பாக புதுச்சேரிக்கு வருவேன்” என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்