பரமக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

By செய்திப்பிரிவு

பரமக்குடி ரோட்டரி சங்கம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் ராமநாதபுரம் மாவட்டப் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் பரமக்குடியில் இலவசக் கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

முகாமுக்கு பரமக்குடி ரோட்டரி சங்க முதன்மை உதவி ஆளுநர் எம். சாதிக் அலி தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் ஆனந்த், ரகுபதி, முருகன், ரூபன், அன்வர் மற்றும் வட்டாரக் கண் மருத்துவ உதவியாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் எம். பன்னீர்செல்வம் வரவேற்றார். டிஎஸ்பி எஸ். வேல்முருகன் முகாமைத் தொடங்கி வைத்தார். சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் விக்னேசுவரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றனர். இதில் 101 பேர் கண் புரை அறுவைச் சிகிச்சைக்காக கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் எஸ்.அய்யப்பன் செய்திருந்தார். ரோட்டரி சங்கச் செயலாளர் எம். சரவணக்குமார் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

27 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்