திருச்செந்தூர் கோயிலில் ரூ.2.47 கோடி உண்டியல் காணிக்கை

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் ஜனவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.2.47 கோடி கிடைத்துள்ளது.

இக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படும். கடைசியாக டிசம்பர் 15-ம் தேதி உண்டியல் எண்ணப்பட்டது. அதன்பிறகு ஜனவரி மாதத்துக்கான உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இணை ஆணையர் (பொ) கல்யாணி தலைமை வகித்தார். கோயில் தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் ரோஜாலி சுமதா, செல்வராஜ், அறநிலையத்துறை ஆய்வாளர்கள் முருகன், நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண்சித்தர் வேதபாடசாலை குருகுலம் உழவாரப் பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுப்பட்டனர். இதில் நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.2 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 378, கோயில் அன்னதான உண்டியலில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்து 835, சிவன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ.8,726, நாசரேத் கோயில் அன்னதான உண்டியலில் ரூ.1,185, கிருஷ்ணாபுரம் அன்னதான உண்டியலில் ரூ.4,564, குலசேகரன்பட்டினம் அறவளர்ந்த நாயகி அம்மன் கோயில் அன்னதான உண்டியலில் ரூ.3,226, கோசாலை பராமரிப்பு உண்டியலில் ரூ.1,14,415, யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.29,282 என, மொத்தம் ரூ.2 கோடி 47 லட்சத்து 12 ஆயிரத்து 611 காணிக்கையாக கிடைத்தது. மேலும், தங்கம் 1,129 கிராம், வெள்ளி 21,246 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 37 கிடைத்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்