திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை மற்றும் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா கல்லூரி முன்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் மரியஆன்டனிராஜ் தலைமை வகித்தார். திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் பேபி முன்னிலை வகித்தார். முன்னதாக தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ் மன்ற தலைவர் பிரபு வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில், வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும். சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் ‘சீட் பெல்ட்' அணிய வேண்டும். மதுபானம் அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டக்கூடாது. வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். விபத்தில்லா மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்க வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் குறிஞ்சிமலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

21 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

41 mins ago

ஓடிடி களம்

34 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்