குமரியில் 54,518 புதிய வாக்காளர்கள்

By செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 54,518 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இம்மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மா. அரவிந்த் வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 54,518 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 7,82,936 ஆண் வாக்காளர்கள், 7,84,488 பெண் வாக்காளர்கள், 203 இதரர் என, மொத்தம் 15,67,627 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்றார். வாக்காளர் பட்டியல் விவரங்களை வாக்குச்சாவடிகள் , உள்ளாட்சி மன்ற அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம்.

தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் தொகுதி ஆண்கள் பெண்கள் இதரர் மொத்தம் கன்னியாகுமரி 1,44,982, 1,47,347, 104 2,92,433 நாகர்கோவில் 1,33,014, 1,36,369, 11 2,69,394 குளச்சல் 1,35,860, 1,31,371, 14 2,67,245 பத்மநாபபுரம் 1,20,362, 1,17,900, 28 2,38, 290 விளவங்கோடு 1,21,339, 1,26,129, 27 2,47,495 கிள்ளியூர் 1,27,379,1,25,372, 19 2,52,770

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

21 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்