கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு தகுதியானவர் கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கெளரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுப்பித்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காத, படித்த இளைஞர்களுக்கு தமிழக அரசால் மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200-ம், அதுவே மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் மாதம் ரூ.600-ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், அதுவே மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் மாதம் ரூ.600-ம், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400-ம், அதுவே மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம், அதுவே மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் மாதம் ரூ.1000-ம் வழங்கப்படுகிறது. உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத் தில் இருந்து விண்ணப்பங்களை பதி விறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமானச் சான்று தேவையில்லை. விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங் களை, உரிய இணைப்புகளுடன் சேர்த்து, கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளித்திட வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்